ஆசிரியர் பக்கம்....

அன்புமிக்க தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்..!

தமிழ் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என வகைப்படுத்தி,
ஒவ்வொரு வகை நிலத்திலும் நம் மக்கள் செல்வச் செழிப்போடு சீரும் சிறப்புமாக
வாழ்ந்ததை இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. மிகப் பழங்காலத்திற்குக் கூடப்
போகவேண்டாம், சுமார் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊரைச் சுற்றி
இருபதுக்கும் மேற்பட்ட பம்பு செட் கிணறுகள் இருக்கும். அதிகாலையில் பம்பு செட்
மோட்டாரை அடித்து விட்டு, விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் தண்ணீர்
பாய்ச்சுவார்கள்.
காலையில் எழுந்து எந்த திசையில் சென்றாலும் அங்கு பம்பு செட் மோட்டார்
ஓடிக்கொண்டிருக்கும். ஊரிலுள்ள இளைஞர்கள், முதியோர்கள், சிறுவர்கள்
எல்லோரும் பம்பு செட்டில்தான் குளிப்பார்கள்.
பம்பு செட்டைச் சுற்றி தோட்டம் பச்சைப் பசேல் என ஏதாவது ஒரு பயிரைச்
சுமந்து கொண்டு செழித்து இருக்கும். ஒரு நாள் போல் தினமும் எங்கள்
கிராமத்திலிருந்து காய்கறி மூட்டைகள் நகரத்திலுள்ள கமி­ன் கடைகளுக்குச்
சென்று கொண்டிருக்கும். எங்கள் ஊர் காய்கறிகளைத்தான் வாங்க வேண்டும்
என்று சில்லரை வியாபாரிகள் கமி­ன் கடைகளில் காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஊருக்குள் முக்கால்வாசி வீடுகளில் ஆடு, மாடுகள் வளர்ப்பார்கள். ஆடு,
மாடுகளுக்குத் தேவையான புற்கள், இலை, தழைகள் தோட்டம், காடு கரைகளில்
நிறைந்து இருக்கும்.
ஊரில் அங்கங்கு களம் இருக்கும். களத்தில் ஏதாவது ஒரு தானியத்தை
காயப்போட்டு பக்குவப்படுத்திக் கொண்டிருப்பார்கள் விவசாயி கள். கடலை விளையும்
காலத்தில் கடலை மூட்டையை அவிழ்த்து காயப் போடுவதும், மழை வந்தால்
காயப்போட்ட கடலையை ஓடி ஓடி அள்ளுவதும் உற்சாகமான விளையாட்டு போல்
இருக்கும்.
ஊரில் உணவுப் பொருட்கள், தானியங்கள், காய்கறிகள் குறைவே இல்லாமல்
எல்லோரும் உழைத்தார்கள், உண்டார்கள், உறங்கினார்கள். வாழ்க்கை ஊர் நிரம்பிய
தாக, வீடு நிரம்பியதாக இருந்தது.
இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. ஊரைச் சுற்றியுள்ள கிணறுகளில்
ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை. பச்சைப் பசேல் என இருந்த தோட்டங்கள்
காய்ந்து கிடக்கின்றன. விவசாய வேலை பார்த்தவர்கள், காலையில் பஸ் ஏறி
சித்தாள், கொத்தனார், நிமிந்தாள், கம்பிக்கட்டு, இந்த மில், அந்த மில் வேலை என
நகரங்களுக்குச் செல்கின்றனர்.
எந்த கிராமத்திலிருந்து காய்கறிகள் மூட்டை மூட்டையாக நகரங்களுக்கு
கொண்டு செல்லப்பட்டதோ, அந்த கிராமத்துக்குள் நான்கு சக்கர வாகனங்களில்
வந்து காய்கறிகள் விற்கிறார்கள்.
ஊர் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தத்தோடு பேசும் போது, காலம்
கலியுகமாப் போச்சு, மனுசங்க கெட்டுப் போய்ட்டாங்க அதுதான் மழை இல்ல,
தண்ணி இல்ல என்கிறார்கள் மக்கள். பூமியின் இயற்கைச் சூழல் கெடுக்கப்பட்டதினால்தான் மழை இல்லை
என்பதையும், இயற்கைச் சூழலைக் கெடுத்தது லாப நோக்கம் மட்டுமே கொண்ட
முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை என்பதையும், முதலாளித்துவத்தையும்,
முதலாளித்துவத்தை வளர்க்கின்ற அரசாங்கத்தையும் மாற்றினால்தான் மக்கள்
வாழ்க்கையில் செல்வமும், செழிப்பும் வரும் என்பதையும் எப்படிப் புரிய வைப்பது என்றுதான் தெரியவில்லை.
*********************************************************************************

பொதுவுடைமை தத்துவ, அரசியல்,
பண்பாட்டு, இலக்கிய இதழ்.

பயணம்

ஆண்டு நன்கொடை ரூ.100.
பயணம் பதிப்பகம்,
பேரூராட்சி வணிக வளாகம்,
மல்லாங்கிணறு
சந்திப்பு முகவரி :
ஆலோசகர் குழு :
சட்ட ஆலோசகர்கள் :
வங்கி மூலம் பணம் அனுப்ப :
N ame : R . SUNDARARAJ,
A / C NO : 1092 188 3723
S B I, VIRUDHUNAGAR,
IFSC : SBIN0000951.

சந்தா, படைப்புகள் அனுப்ப :
பயணம் இலக்கிய இதழ்,
மேலத்துலுக்கன்குளம்,
மல்லாங்கிணறு ( வழி ),
விருதுநகர் ( மாவட்டம்)
பின் கோட் -  626109.
பேச : 936 312 5082.



*********************************************************************************


உலகிலேயே அழகானது...

அன்புமிக்க  தமிழ்  உள்ளங்களுக்கு..!  வணக்கம்..!
இயற்கைக்கு அடுத்தபடியாக உலகிலேயே அழகானது எதுவென்று சொல்லித்தான்   ஆக வேண்டும்   என்றால்   அது   உழைப்பே   ஆகும்.   
அழகுகளையயல்லாம்   படைத்ததும்,  படைக்க  இருப்பதும்  உழைப்பு  என்பதால்   ""உழைப்பு   ''   ஒன்றே  உலகில்   அழகானதாகும்.  
நகரங்களில்   நம்மை   பிரமிக்க   வைக்கும்   கட்டடங்களாகட்டும்,
அழகழகாய்  காட்சியளிக்கும்  பள்ளிக்கூடங்கள்,  பூங்காக்கள், விளையாட்டு
மைதானங்கள்,  வீட்டை  அலங்கரிக்கும்   கலைப்  பொருட்கள்,  நீங்கள்  அழகாய்  இருக்கவேண்டும்  என  அணியும்  ஆடைகள்  என  அனைத்தும்  உழைப்பின்  விளை  பொருட்களேயாகும்.
இயற்கை   இயற்கையாகக்   கொண்டிருக்கும்   செல்வங்களுக்கும், அழகுக்கும்  அடுத்தபடியாக,  உலகிலுள்ள செல்வங்கள், அழகுகள் அனைத்தையும்  சொந்தம்  கொண்டாட   தகுதி   படைத்தது  உழைப்பேயாகும்..     ஏங்கெல்ஸ்  உழைப்பு  குறித்து  கூறும்போது, ""  கைகள்  உழைப்பிற்கான  கருவி  மட்டுமல்ல  உழைப்பின்  விளைபொருளும்   அதுவே   ''  என்றார். மனிதக்  குரங்குகளின்  முடி  அடர்ந்த,  நகம்  வளர்ந்த,  கரடு  முரடான  கால்களை  ஒத்திருக்கும்   கைகளுக்கும்,  இன்று   கணினியில்   நுணுக்கமான  பணி  புரியும்   நமது   கைகளுக்கும்  இடையில்தான்  எவ்வளவு  வித்தியாசம்.
மனிதக்  குரங்குகள்  கம்புகளை  எடுத்து  மரத்திலிருந்த  பழங்களை  அடிக்காமல்  இருந்திருந்தால், ஆதிகால  மனிதன்  கற்களையும்,  எலும்புகளை
யும்  வைத்து  மிருகங்களை  எதிர் கொள்ள  ஆயுதங்களைச்  செய்யாமல்
இருந்திருந்தால்...  சுருக்கமாகச்  சொன்னால்  உழைக்காமல்  இருந்திருந்தால்
கவிதைகளும்,  கட்டுரைகளும், கதைகளும்  எழுதும்  அழகான  கைகளும்,
மூளையும்  நமக்குக்   கிடைக்காமலேயே  போயிருக்கும். உழைப்பின்   போது    மனிதன்   இயற்கையின்   மீது   செயல்புரிந்து   இயற்கையை செழுமைப்படுத்தும்  அதே   வேளையில்,  இயற்கை  மனிதனுள்
செயல்புரிந்து   மனிதனையே   செழுமைப்படுத்துகிறது.  எனவே   உழைப்பு
என்பது வெறும் புற விசயமல்ல. இயற்கையையும்  மனிதனையும்  செழுமைப்
படுத்தி, தனி மனிதனையும், குடும்பத்தையும், சமூகத்தையும்  வளர்ச்சி  நோக்கி உந்தித்  தள்ளும்   வாழ்வின்   மிக  உயர்ந்த  உள்ளார்ந்த  விசயம்  உழைப்பாகும்.

துரதிருஷ்டவசமாக   உடலுழைப்பை   மட்டமாகக்   கருதும்   போக்கு  சமூகத்தில்  ஆதிக்கம்  செலுத்துகிறது.  ஆனாலும்   "" வியர்வையில்  விளையும்
பொற்கனிகளாகிய  செல்வங்களை ''   குனிந்து  எடுத்துக்  கொள்ளவோ  அல்லது
அபகரித்துக்  கொள்ளவோ, உடலுழைப்பை மட்டமாகக் கருதுவோர் சிறிதும்
வெட்கப்படுவதில்லை.  உழைக்கும் மக்களின் உழைப்பில் விளையும்
பொற்கனிகளாகிய   செல்வங்களை   எடுத்துக்   கொள்ளும்   /   அபகரித்துக்
கொள்ளும்   உரிமை   எனக்குள்ளதா   உனக்குள்ளதா   என்னும்   போட்டியே
தமிழக,   இந்திய,   உலக   அரசியலாக   இருந்து   கொண்டிருக்கிறது..
உழைக்கும் மக்களின் உயர்வை, முதலாளித்துவத்தின் சுரண்டலை
எழுதாமல்,   சினிமாக்காரர்களின்,   அரசியல்வாதிகளின்,   ஆளும்   வர்க்கத்
தினரின் பெருமைகளை  கலர்  கலராய்  அச்சிட்டு  மக்களை  மயக்கத்திலும்,
பொய்மையிலும்   மூழ்கடித்து  வருகின்றன  முதலாளித்துவப்  பத்திரிகைகள்.
உழைக்கும் மக்களுக்கான தத்துவம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு,   இலக்கியம்   ஆகியவற்றை   முன்னெடுத்துச்   செல்லும்   பணியில்  பயணம்  உங்கள்  கரங்களில்

                                                                                                            தோழமை அன்புடன்
                                                                                                                      ஆசிரியர்

No comments:

Post a Comment